வன்னியர்
வன்னியர் என்ற சொல் "வன்மை" என்ற தமிழ் சொல்லிலிருந்து தோன்றியதாக கருதப்படுகிறது.வன்மை என்ற சொல்லுக்கு 'வலிமை நிறைந்த' என்பது பொருளாகும்.வன்னியர் என்னும் சொல்லுக்கு நெருப்பிலிருந்து பிறந்தவர்கள் என்றும் வன்னி மரங்கள் அடர்ந்த பகுதிகளில் ஆட்சி செய்தவர்கள் என்றும் இரு வேறு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. வன்னியர்கள் தென்னிந்தியாவில் பெரும்பாலும் அதிகமாக காணப்படுகின்றனர்.இவர்கள் ஆரியர் அல்லாத திராவிடர் இனத்தை சேர்ந்தவர்களாவர்.ஆந்திரா மற்றும் கர்னாடகாவில் அக்னிவம்சி என்றும் அழைக்கப்படுகின்றனர்.
சீர்காழி வைத்தீஸ்வரர் கோவில் வளாகத்தில் காணப்படும் கல்வெட்டுகள் கீழ்கண்ட செய்திகளை தெரிவிக்கின்றன: புராணகாலத்தில் அசுரர்களான வாதாபி,மஹி என்பர்கள் பிரம்மனை நோக்கி தவம் செய்து சாகாவரம் பெற்று உலகையே துன்புறுத்தி,கொடுஞ்செயல்கள் செய்து வந்தனர்.அவர்களை அழிக்க வேண்டி ஜம்பு மகாமுனிஒரு யாகம் செய்தார்.அப்போது அந்த யாககுண்ட நெருப்பிலிருந்து வாளுடன் தோன்றிய வீரனொருவன் அந்த அசுரர்களை அழித்தான்.அவனின் வழிதோன்றல்கள் வன்னியராவர். இந்த வம்சத்தில் தோன்றிய ருத்ர வன்னிய மாகாராஜா தென்னிந்தியாவை ஆட்சி செய்தான்
படையாச்சி,பள்ளி,கவுண்டர்,நாயக்கர்,சம்புவரையர்,காடவராயர்,கச்சிராயர்கள்,காலிங்கராயர்,மழவரையர்,உடையார்,சோழிங்கர், போன்ற சாதியினர் வன்னியரின் உட்பிரிவுகளாக கூறப்படுகின்றனர். வன்னியர்கள் பல்லவ வம்சத்தை சேர்ந்த்தவர்கள் என்றும் பரவலாக கருதப்படுகிறது. இந்த கருத்தை உறுதியாக்கும் வகையில் பல சரித்திர ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இலங்கையின் பல பகுதிகள் வன்னியர்களாலும்,வன்னியச்சிகளாலும் ஆட்சி செய்யப்பட்டது. வன்னியர்களின் அடையாளமாக வன்னி மரம் கருதப்படுகிறது.
தமிழகத்தில் மக்கள் தொகை அடிப்படையில் மிகப்பெரிய சமுதாயம் வன்னியர்களே ..
தமிழகத்தில் பெரும்பான்மை மக்கள் தொகை கொண்ட சமுதாயம் . வடக்கு தமிழகத்தில் தங்களை நாயக்கர் என்று அழைத்துக்கொள்ளும் இவர்கள் பல்லவர்களின் வம்சமாக அறியப்படுகிறார்கள் . விஜயநகர நாயக்கர் ஆட்சி காலத்திலும் சில பாளையங்களை இவர்கள் ஆண்டு வந்துள்ளனர் .தமிழ் ,தெலுங்கு மொழியை தாய் மொழியாக கொண்டுள்ள இவர்கள் , தமிழ் மொழியினை தாய்மொழியாக கொண்டவர்கள் வன்னிய குல சத்திரியர் என்றும் , தெலுங்கை தாய் மொழியாக கொண்டவர்கள் 'அக்னி குல வம்சி அக்னி குல சத்திரியர் என்று அழைக்கப்படுகின்றனர்
நாயக்கர்கள் கட்டிய கோவில்கள்
- மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் - விசுவநாத நாயக்கர்
- ஆயிரங்கால் மண்டபம் , வீர வசந்தியர் மண்டபம் , வசந்த மண்டபம் - திருமலை நாயக்கர்
- கிளி கூடு மண்டபம் , தெப்பகுளம் , மீனாக்ஷி நாயக்கர் மண்டபம் -- ராணி மங்கம்மாள்
- திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் - ராஜ கோபுரம் ,
அண்ணாமலை கோபுரம் , ஆயிரங்கால் மண்டபம் , கோவில்குளம் --- கிருஷ்ண தேவ ராயர்
- காளகஸ்தி கோவில் - 120 அடி கோபுரம் , 100 கால் மண்டபம் -- கிருஷ்ணதேவ ராயர்
காஞ்சி ஏகாம்பரீஷ்வர் கோவில் -- 192 அடி கோபுரம் , 100 கால் மண்டபம் , வரதராஜ கோவில்
- திருவரங்கம் கோவில் - குதிரை மண்டபம் , கருடா மண்டபம் , சந்திரா சூர்யா புஷ்கரணி குளம்
- மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில்
- திருச்சி உச்சி பிள்ளையார் கோவில்
- வண்டியூர் மாரியம்மன் கோவில்
- திருப்பதி எழுமலையான் கோவில் - படிகட்டுகள் , தற்போதைய கோபுரம்
கல்யாண மண்டபம் , வசந்த மண்டபம் , ராய கோபுரம் -- ஸ்ரீ கிருஷ்ண தேவ ராயர்
- ஹம்பி வித்தல கோவில் - உலக புகழ் பெற்றது
- ஆற்காடு , தஞ்சாவூர் , கும்பகோணம் பகுதிகளில் உள்ள கோவில்கள் --- தஞ்சை நாயக்கர்கள்
இது மட்டும் அல்லது சிறு மற்றும் பெரிய கோவில்கள் பலவற்றை விஜயநகர , நாயக்கர் மன்னர்களால் கட்டப்பட்டு உள்ளது , பழைய கோவில்களையும் இம்மன்னர்கள் புதுப்பித்து ஆன்மிகத்துக்கு அறிய பல தொண்டுகளை செய்து உள்ளனர் .
நாயக்கர்கள் கட்டிய கோட்டைகள்:
நாயக்கர் ஆட்சி காலத்தில் தமிழகம் முழுவதும் பெரும்பாலான கோட்டைகள் கட்டப்பட்டன , நாட்டின் பாதுகாப்புக்கும், எதிரிகளிடம் இருந்து நாட்டை காப்பாற்றவும் பல கோட்டைகள் நாயக்கர் கால ஆட்சியில் கட்டப்பட்டன . அவற்றுள் சில பிரபலமான கோட்டைகள் :
- திருச்சி மலைகோட்டை - விசுவநாத நாயக்கரால் கட்டப்பட்டது - புகழ் பெற்ற கோட்டை[
- நாமக்கல் கோட்டை - ராமச்சந்திர நாயக்கர் - 16 ஆம் நூற்றாண்டு - குறுநில மன்னர்
- திண்டுக்கல் கோட்டை - முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் - 16 ஆம் நூற்றாண்டு
- வேலூர் கோட்டை - சின்ன பொம்மி நாயக்கர், திம்ம ரெட்டி நாயக்கர் - 15 ஆம் நூற்றாண்டு
- உதயகிரி கோட்டை - கஜபதி ராயர்
- சங்ககிரி கோட்டை - 15 ஆம் நூற்றாண்டு
விடுதலைப் போராட்ட வீரர்
- வீரபாண்டிய கட்டபொம்மன்
- ஊமைத்துரை
- கிருஷ்ணதேவராயன்[
- கனகேந்தி அனுமந்து - பாலநாடு அரசு
- விசுவநாத நாயக்கர்
- குமார கம்பணன
- இராணி மங்கம்மாள்
- ராணி கங்காதேவி ( மதுர விஜயம் எழுதிய அரசி )
- ராணி ருத்ரம்மா (காகதிய அரசி )
- விருப்பாச்சி கோபால நாயக்கர் (திண்டுக்கல் விடுதலைப் போராட்ட வீரர் )
[]சொக்கநாத நாயக்கர்
நாயக்க மன்னர்களின் வரிசையில் மற்றொரு குறிப்பிடத்தக்க மன்னர் சொக்கநாத நாயக்கர். இவர் 23 ஆண்டுகள் மதுரைநாட்டை ஆண்டார். இவருக்குப் பல சோதனைகளும் தோல்விகளும் ஏற்பட்டன. தமிழகத்தின் ஒரு பகுதியில் மராட்டியர் ஆட்சி ஏற்பட்டு, அதன் பண்பாட்டுக்கூறுகளும் தமிழகத்திற் பரவின. சொக்கநாதர் காலத்தில் நாட்டில் ஏற்பட்ட பஞ்சம் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது; பசியால் துன்புற்று ஆயிரக்கணக்கானவர்கள் இறந்தனர். ஏகோஜி தஞ்சையைக் கைப்பற்றுவதற்கு முன்னர், தஞ்சையை ஆண்ட விஜயராகவ நாயக்கர், தமக்குப் பெண் கொடுக்க மறுத்தமையால் சொக்கநாதர் அவர் மீது போர் தொடுத்தார். விஜயராகவர் குடும்பத்தையே சொக்கநாதர் அழித்தார். சொக்கநாதர் இறுதிக்காலத்தில் அவருக்கு வேண்டியவர் களாலேயே சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு அவருடைய குதிரைப் படைத்தலைவரால் விடுவிக்கப்பெற்று மறுபடியும் நாட்டை ஆண்டார். சொக்கநாதர் அவசரபுத்தி உடையவர்; பழிவாங்கும் குணம் படைத்தவர். பிடிவாதம் கொண்டவர். எனவே அவர்காலத்தில் நாயக்கர் ஆட்சி நிலை தாழ்ந்தது.[]முத்து வீரப்ப நாயக்கர்
சொக்கநாத நாயக்கர்- இராணி மங்கம்மாள். இவர்களின் மகன், முத்து வீரப்ப நாயக்கர் ஆட்சி செய்த போது, அவுரங்கசீப் என்ற மொகலாய மன்னர், தம் செருப்பை, நாடெங்கும் ஊர்வலமாக அனுப்பினார். அச்செருப்புக்கு எல்லாரும் மரியாதை செய்ய வேண்டுமென்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் வீரமிக்க முத்துவீரப்பர் அந்தச்செருப்பைத் தன்காலில் அணிந்து கொண்டு “உங்கள் மன்னர் இன்னொரு செருப்பை அனுப்பவில்லையா?” எனக் கேட்டார்.ஏழே ஆண்டுகள் வாழ்ந்த முத்து வீரப்பர் இறந்த போது அவர் மனைவி கருவுற்றிருந்தாள். பிள்ளையைப் பெற்றுவிட்டு அவ்வரசியும் உயிர் விட்டாள்.[]இராணிமங்கம்மா
சொக்கநாத நாயக்கரின் மனைவி மங்கம்மாள் அரசப் பொறுப்பை ஏற்றார். இராணி மங்கம்மாள் வீரமிக்கவர். அவர் தன் தளபதி நரசப்பய்யாவின் துணையால் தஞ்சை, மைசூர், திருவனந்தபுரப் படைகளை வென்றார். தம் கணவர் காலத்தில் இழந்த பகுதிகளை மீட்டார். மங்கம்மாள் செய்த அறச் செயல்கள் பலப்பல. சாலைகள், தண்ணீர்ப் பந்தல்கள், வாய்க்கால் சீரமைப்பு, சாலை ஓரம் மரம் நடுதல், அன்ன சத்திரங்கள் ஆகியன மங்கம்மாள்ஆட்சியில் சிறப்புநிலை அடைந்தன.
No comments:
Post a Comment